George / 2016 ஜூன் 12 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய், மகளை கொன்று கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை அகதி 13 வருடங்களுக்குப் பிறகு , சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திண்டுக்கல் பகுதியில் வசித்து வந்தவர் துரை என்பவருடைய மனைவியான பூங்கோதை மற்றும் மகளான 3 வயது குழந்தை ஜனப்பிரியா ஆகிய இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு வந்த ஒரு கும்பல், 2 பேரையும் கொன்று, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை 2003ஆம் ஆண்டு கொள்ளையடித்தது.
இது குறித்து பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கில் தொடர்ந்து மர்மமே நீடித்து வந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில வருடங்களின் பின்னர், கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில், இதே போல பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்று ஒரு கும்பல் கொள்ளையடித்தது.
இந்த சம்பவத்தில்; ஈடுபட்ட முரளி, தங்கபாண்டி (சம்பவத்தின்போது இவருக்கு 12 வயது), கரூர் ராயனூர் அகதிகள் முகாமை சேர்ந்த தற்கொலை குமார் என்று அழைக்கப்படும் குமார் ஆகியோரை கரூர் மாவட்ட பொலிஸார் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து திண்டுக்கல் இரட்டை கொலை வழக்கிலும் இவர்கள் 3 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டதுடன் இரட்டை கொலை வழக்கில் அவர்களை கைதுசெய்யும் முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டனர்
இந்நிலையில், கரூர் வழக்கில் அவர்களுக்கு பிணை கிடைத்து வெளியே வந்த 3 பேரும் தலைமறைவானார்கள்பி றகு, கைதானார்கள்.
இந்த நிலையில், கரூர் வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அகதி என்பதால் குமார், சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், இரட்டை கொலை வழக்கில் அவரை கைது செய்ய திண்டுக்கல் நகர் வடக்கு பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து இரட்டை கொலை வழக்கில் குமாரை கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளர்.
இரட்டை கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு குமார் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .