2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கனேடியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 13 , மு.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெராரி அணியின் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டலுடனான பதற்றமான உத்திசார் மோதலையடுத்து, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸை வென்றார்.

மூன்றாவது இடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த வெட்டல், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற வெட்டல், பந்தயத்தின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், பந்தயத்தின் முக்கியமான நேரத்தின் போது, அவரினது காரை நிறுத்த பெராரி தீர்மானித்த நேரத்தில், ஒரு தடவை மாத்திரமே நிறுத்தியிருந்த ஹமில்டன்  முன்னிலைக்கு வந்திருந்தார்.

இதேவேளை, இப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனக்கும் சக மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்குக்குமிடையிலான  புள்ளிகள் வித்தியாசத்தை, ஒன்பதாக, ஹமில்டன் குறைத்துக் கொண்டார். இப்பந்தயத்தில் ஐந்தாம் இடத்தையே றொஸ்பேர்க் பெற்றிருந்தார்.

இப்பந்தயத்தில் வெட்டல் இரண்டாமிடத்தைப் பெற்ற நிலையில், வில்லியம்ஸ் அணியின் பின்லாந்துச் சாரதியான வல்ட்டேரி போத்தாஸ், மூன்றாமிடத்தைப் பெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X