Administrator / 2016 ஜூன் 14 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்ஜித்ராஜபக்ஷ
உள்ளூராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினரொருவர், கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு முன்னால் தலைகீழாக நின்று, இன்று (14) ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டார்.
உள்ளூராட்சி மன்றங்கள், நகரசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டதெனவும் இனியும் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவருடன் இணைந்து ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள்; உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
'உள்ளூராட்சி சபைகள் மற்றும் நகரசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ள நிலையில் பிரதேச சபைகளின் செயற்பாடுகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால், இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சேவைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு மக்களாக இருக்கும் பிரதேச சபை மற்றும் நகரசையினூடாக மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலை காணப்படுகின்றமையால், எவ்வித காரணங்களையும் காட்டி காலம் தாழ்த்தாது உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .