Shanmugan Murugavel / 2016 ஜூன் 14 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து, இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிரிவர்தன நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிய வீரராக அண்மைக்காலத்தில் மாறியிருந்த சிரிவர்தன, கடந்த சில போட்டிகளாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையடுத்தே, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ரங்கன ஹேரத் தவிர, டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா ஆகியோருக்கும் இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை.
இலங்கைக் குழாம்:
அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, ஷமின்ட எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குசால் மென்டிஸ், தசுன் ஷானக, பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரந்தீவ், சீக்குகே பிரசன்ன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .