2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை

George   / 2016 ஜூன் 15 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X