2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐஸ்லாந்தின் 'சிறுமைத்தனத்தை' விமர்சிக்கிறார் ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 15 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் - ஐஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஐஸ்லாந்து அணி வீரர்கள் மீது, போர்த்துக்கல் அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

போட்டி முடிவில், ஐஸ்லாந்து அணியின் வீரர்களோடு கைகுலுக்க மறுத்திருந்த ரொனால்டோ, ஐஸ்லாந்து வீரர்கள் கொண்டாடிய விதம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். "இறுதியில் அவர்கள் கொண்டாடிய விதத்தைப் பார்க்கும்போது, யூரோ கிண்ணத்தை அவர்கள் வென்றுவிட்டார்கள் என நினைத்தேன்" என்றார்.

"நம்ப முடியாதிருந்தது. போட்டி வெல்வதற்கு நாம் கடுமையாக முயன்றோம். ஐஸ்லாந்து எதையும் முயலவில்லை. என்னைப் பொறுத்தவரை இது, சிறுமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, இந்தத் தொடரில் அவர்கள் எதனையும் செய்யப் போவதில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது" என்றார்.

எனினும், ரொனால்டோவின் விமர்சனங்களை நிராகரித்த ஐஸ்லாந்தின் முன்னாள் வீரர் ஹெர்மன் ரெய்டர்சன், ரொனால்டோவுக்குப் பதிலடி வழங்கினார். ரொனால்டோவை சில்லறைத்தனமானவர் எனவும் தோல்வியை ஏற்காதவர் எனவும் வர்ணித்தார். அத்தோடு, "கோல்களைத் தட்டில் வைத்துத் தருவார்கள் என நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X