2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

வெளியாகியது இங்கிலாந்து பிறிமீயர் லீக் போட்டி அட்டவணை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 15 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016-17 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 13ஆம் திகதி, இப்பருவகாலத்துக்கான முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது.

முதல் வாரத்தில், நடப்புச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணி, ஹள் சிற்றி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்சனல் - லிவர்பூல், போர்ண்மெத் - மன்செஸ்டர் யுனைட்டட், பேர்ண்லி - சுவன்சி சிற்றி, செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி - சண்டர்லான்ட், மிடில்ஸ்புரோ - ஸ்டோக் சிற்றி, சௌதாம்டன் - வட்போர்ட் ஆகிய போட்டிகள், முதல் வாரத்தின் ஏனைய போட்டிகளாக அமையவுள்ளன.

இப்பருவகாலத்தின் புதிய முகாமையாளர்களாகப் பதவியேற்ற ஜொஸ் மொரின்ஹோ (மன்செஸ்டர் யுனைட்டட்), பெப் கார்டியாலோ (மன்செஸ்டர் சிற்றி) ஆகியோர், செப்டெம்பர் 10ஆம் திகதி சந்திக்கவுள்ளனர்.

ஜொஸ் மொரின்ஹோ, தனது பழைய கழகமான செல்சியை, ஒக்டோபர் 22ஆம் திகதியன்று சந்திக்கவுள்ளார்.
தொடரின் இறுதி வாரம், அடுத்தாண்டு மே மாதத்தின் 4ஆவது வாரமாக (21ஆம் திகதி) அமையவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .