2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யூரோ 2016: இறுதிப் 16 அணிகளில் ஸ்பெயின், இத்தாலி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 18 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஸ்பெயினும் இத்தாலியும் தகுதி பெற்றுள்ளன.

ஸ்பெயின், துருக்கி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, ஏற்கெனவே செக் குடியரசையும் தனது முதலாவது குழுநிலைப் போட்டியில் வென்றிருந்த நிலையில், குழு டியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகள்ச சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், ஸ்பெயின் சார்பாக அல்வாரோ மொறாட்டா இரண்டு கோல்களையும் நொலிட்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலி, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, ஏற்கெனவே தனது முதலாவது குழு நிலைப் போட்டியில் பெல்ஜியத்தை வென்றிருந்த நிலையில், குழு இயிலிருந்து முதலாவது அணியாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோலினை ஈடர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குரோஷியா, செக்.குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியின் நடுவே, எரிசுடர்களை, இரசிகர்கள் மைதானத்துக்குள் எறிந்திருந்த நிலையில், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .