2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூரோ 2016: இறுதி 16 அணி சுற்றில் சுவிற்ஸர்லாந்து

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ண போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து ஆகிய போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு சுவிற்ஸர்லாந்து தகுதி பெற்றதுடன், மற்றைய போட்டியில், றோமானியாவை தோற்கடித்த அல்பேனியா, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டிக்கான பிரான்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆரம்பித்திருக்காத அந்தோனி கிறீஸ்மன்னும் போல் பொக்பாவும் ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், கோல்களைப் பெற்ற திமித்திரி பயேட் ஆரம்பித்திருக்கவில்லை.

இதேவேளை, அல்பேனியா, றோமானியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மேற்படி போட்டிகளின் முடிவில், குழு ஏயில் முதலிடம் பெற்றுள்ள பிரான்ஸ், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், குழு சி, டி அல்லது இயில் மூன்றாவது இடம்பெற்ற அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) லயோனில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், பெரும்பாலும், வடக்கு அயர்லாந்து அல்லது அயர்லாந்துக் குடியரசை சந்திக்கவுள்ளது.

மறுகணம், இக்குழுவில் இரண்டாமிடம் பெற்றுள்ள சுவிற்ஸர்லாந்து, குழு சியில் இரண்டாமிடம் பெற்ற அணியை இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், தற்போதைய நிலையில், போலந்தை சந்திக்க வேண்டும். எனினும், சந்திக்க வேண்டிய அணியானது ஜெர்மனி அல்லது வடக்கு அயர்லாந்தாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

தவிர, இக்குழுவில் மூன்றாமிடம் பெற்றுள்ள அல்பேனியா, ஏனைய நான்கு, மூன்றாமிடம் பெற்ற அணிகளில் சிறந்த அணியாக இருக்குமானால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .