2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

மைத்திரியின் பேஸ்புக் விருப்பங்கள் மளமளவென சரிந்தன

George   / 2016 ஜூன் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் (Like) பெற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனவின் பேஸ்புக் விருப்ப பக்கத்தில் (Like Page) விருப்பங்களின் எண்ணிக்கை ஒரே நாளில் சடுதியாக குறைவடைந்துள்ளது. 

இலங்கை அரசியல்வாதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முதலிரு இடங்களை பிடித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் விருப்பப் பக்கத்தில் (திங்கட்கிழமை மாலை 7 மணிவரை) 1,002,389 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் விருப்பப் பக்கத்தில் (திங்கட்கிழமை மாலை 7 மணிவரை)  1,001,484 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் இன்று செவ்வாய்க்கிழமை மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் பக்க விருப்பங்கள் 1,002,389 லிருந்து 866,002 ஆக (மாலை 4 மணி) குறைவடைந்துள்ளது.

அதன்படி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்த 135,482 பேர் UnLike செய்துள்ளனர்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தின் விருப்பங்கள் 486ஆல் அதிகரித்து 1,002, 875ஆக (மாலை 4 மணி) காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .