2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தனுஷால் காயமடைந்த நயன்

George   / 2016 ஜூன் 21 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம்.

இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார்.

அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஆனால் நயன்தாராவை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. பாராட்டவும் இல்லையாம்.

காரணம் நானும் ரௌடி தான் படப்பிடிப்பின் போது காதலர்களாக மாறிய இக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரொமான்ஸுக்காக நிறைய நேரங்களை செலவிட்டதால் படப்படிப்பு தடைபட்டு, அதனால் பட்ஜெட் அதிகமாகி, தொடர்ந்து வெளியீடு தள்ளிப்போனது வரை நடந்த கசப்பான சம்பவங்கள் தனுஷை ரொம்பவே கோபப்பட வைத்துவிட்டதாம்.

அதனால் தான் தனுஷ் பேசும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையாம். இதனை உணர்ந்த நயன்தாரா, தான் மேடையேறி விருது வாங்கும்போது, 'தனுஷ் என்னை பற்றி எதுவும் பேசவில்லை... ஒருவேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்கவிலையோ என்னவோ. சாரி தனுஷ் என வருத்ததுடன் கூறினார். 

மேலும் அந்த கணத்தில் தனுஷை கொஞ்சம் காயப்படுத்தலாம் என நயன்தாரா நினைத்தாரா என்று தெரியவில்லை, இந்த விருதை நான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமர்ப்பிக்கிறேன்' என தனது காதலரை உயர்த்தி பிடித்து பேசியுள்ளார்.

என்னம்மா நயன் இப்டி பண்ணீட்டிங்களேம்மா... என்கின்றனர் ரசிகர்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X