2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

மஹர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி (UPDATE)

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் போதைபொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


11.15AM

மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹய்பிரிட் வாகனமொன்றில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .