2024 மே 02, வியாழக்கிழமை

2ஆவது போட்டி நாளை: சந்தேகத்தில் மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 23 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்து கொள்வாரா என்பது குறித்துச் சந்தேகம் நிலவுகிறது. எட்ஜ்பஸ்டனில் இடம்பெறும் இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, சமநிலையில் முடிவடைந்திருந்தது. இலங்கை அணி தடுமாறிய போது 73 ஓட்டங்களைப் பெற்ற மத்தியூஸ், பந்துவீச்சில் 6 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆனால், அதன் பின்னர் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். அதுவரை வெற்றியைத் தம்வசம் வைத்திருந்த இலங்கை, பின்னர் களத்தடுப்பிலும் உத்திகளிலும் மோசமாகச் செயற்பட்டுத் தோற்றிருந்தது.

மத்தியூஸூக்கு ஏற்பட்ட பின்தொடைத் தசைநார் உபாதை இன்றும் சரியாகாவிட்டால், இன்றைய போட்டியில் அவர் பங்குபற்ற மாட்டார் என்பதோடு, இலங்கை அணி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் தலைமைத்துவத்திலும் பாரிய இழப்பைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பந்தை எறிவதாக நிரூபிக்கப்பட்டு, பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ள ஷமின்ட எரங்கவுக்குப் பதிலாக, மாற்று வீரரொருவரை இங்கிலாந்துக்கு வந்துள்ள இலங்கை ‘ஏ” அணியிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக, இலங்கை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .