Kanagaraj / 2016 ஜூன் 24 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 1 கிலோகிராம் 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்விரு சுற்றிவளைப்புகளின் போதும், 2 பெண்கள் உட்பட ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 12 மில்லியன் ரூபாவாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டிய
வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 1 கிலோகிராம் 50 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. அதன்போது பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர் முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.
கிரேண்ட்பாஸ்
கிரேண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 450 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .