2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

'நல்வழியில் செல்லாவிடின் நானிருக்க மாட்டேன்'

Princiya Dixci   / 2016 ஜூன் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் ஒரு போதும் ஒருவருக்கும் தவறான வழிக்காட்டல்களை வழங்கியதில்லையெனவும் தவறுகளைக் கண்டறியும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் சட்டத்துக்கேற்ற முறையில் செயற்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் சேவையை பாராட்டும் பொருட்டு ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த நிகழ்வி கலந்துகொண்டிருந்த போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

'பாதுகாப்புப் பிரிவில் இருபது - முப்பது வருடங்களாக ஒரே நிலையில் சேவையாற்றிய பொழுதும் எவ்விதப் பதவியுயர்வுகளும் வழங்கப்படவில்லை. நான் ஒன்றறை ஆண்டுகளாக சேவையாற்றிய போதிலும் இன்று வரையில் சத்தம் போடுகின்ற நாடகங்கள் ஆடுகின்ற தொழிற்சங்கங்க தலைவர்கள் ஒருவரேனும் தங்களுடைய பதவியுயர்வு தொடர்பாக பேசவில்லை. சகோதரர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு என்னிடம் கதைத்தார்கள்.

'மேலும், அந்நபர்களுடைய பதவியுயர்வு தொடர்பாக மாத்திரமே என்னிடம் பேசினார்கள். அதனால் தான் எனக்கெதிராக அவர்கள் சேறு பூசும் நடவடிக்கையினை முன்னெடுத்தப் பொழுதிலும் எவ்வித அச்சமுமின்றி  புன்முறுவலுடன் என்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றேன்.  

'தற்பொழுது சத்தமிடுகின்ற தொழிற்சங்கங்கள் இவ் நல்லாட்சியை ஏற்படுத்தவில்லை. புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் நான் முன்னின்று செயற்பட்டேன். வேலை செய்யும் நபரைத் திருட்டுச் செயல்களில் ஈடுபடாத நபரை நாம் உடனடியாக உயர் நிலைக்கு கொண்டுச் செல்ல வேண்டும். கடந்த காலத்தைப் போன்று எமக்கு நெருங்கியவாகளுக்கு அரசியல் நியமணங்களை வழங்கவில்லை.  நாங்கள் திருட்டில் ஈடுபடாதவர்களையே நியமிக்கின்றோம்.

'தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் பொழுது சாதாரணதரம் மற்றும் உயர் தர கல்வி தகைமைகளை அல்ல மாறாக திருட்டில் ஈடுப்படாதவர்களா என்றே நான் பார்க்கின்றேன். திருட்டில் ஈடுபடாத கல்வியறிவற்ற நபரையும் நான் எந்தவொரு இடத்துக்கும் கொண்டுச் செல்வேன்.

'கடந்த 10 ஆண்டுகளாக இந்நாட்டில் திருட்டுச் செயல் என்பது சட்டரீதியானதாக்கப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் இந்நிலையினை மாற்றியமைப்பதற்கே அரும்பாடுபடுகின்றார்கள். திருடர்களைப் பிடிக்கும் பொழுது எதிர்கட்சியினர் சத்தம் போடுகின்றார்கள். இன்றும் திருடர்களைப் பிடித்தவுடன் அரசியல் பழிவாங்கல்கள் என்கின்றார்கள்' என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் மகாநாட்டு மண்டபத்தில் ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் 15 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட்ட முதற்சந்தர்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X