2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருடிய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை மாற்றிய மாணவன் கைது

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா    

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டினை மாற்றி, அதனை செலுத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 14 வயது மாணவனொருவனை பிபிலை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவன், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று, தனது தந்தையின் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டை, திருடிய மோட்டார் சைக்கிளில் பொருத்தி, செலுத்திச் சென்றுள்ளான்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .