2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இனி சீனியும் கசக்கும்

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனி உற்பத்தி பொருட்களின் வரியை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேகாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இந்த சீனி காணப்படுவதால் மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு உதாரணமாக இங்கிலாந்து நாடு காணப்படுவதை அமைச்சர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள மென்பான தயாரிப்பு நிறுவனங்களில் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .