2024 மே 08, புதன்கிழமை

மக்களின் காணியை ஊடறுத்து இணைப்பு வீதி

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி - அராலி விதியினை திறந்து பொதுமக்களின் பாவனைக்கு விடுவிக்குமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும், இராணுவத்தினர் அதற்கு மாறாக பொதுமக்களுடைய சொந்த நிலங்களை ஊடறுத்து, புதிய வீதியினை ஒன்றினை உருவாக்கி உயர் அதிகாரிகளிடம் கையளித்து உள்ளமை காணி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வரை செல்லும் பாதை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப் பாதையினை திறந்து விட்டால் அராலி, வட்டுக்கோட்டை ஊடாக இளவாலை, தெல்லிப்பளைக்கு  செல்வது இலகுவாக்கப்படும் என பல முறை பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.  

சனிக்கிழமை (25) பாதுகாப்பு செயலாளரால் குறித்த வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இராணுவத்தினர் கட்டுவன் பகுதியிலிருந்து பொதுமக்களின் காணியினை ஊடறுத்து குரும்பசிட்டி சந்தி வரை புதிய பாதையினை உருவாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக அச்சுவேலி பகுதியில் இருந்து தெல்லிப்பளை பகுதிக்கு வரும் மக்கள் ஒட்கப்புலம், வசாவிளான் ஊடாக வருகை தந்து பின்னர் குட்டியபுலம் வீதிக்கு திரும்பி அங்கிருந்து வசாவிளான் மத்திய கல்லூரியினை சென்றடைந்து, குரும்பசிட்டி ஊடாக தெல்லிப்பளை பகுதியினை சென்றடையும் விதமாகவே இப் பாதை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பாதை உருவாக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் தமது வீட்டுத்திட்ட பணிகளை மேற்கொள்ளுமிடத்து குறித்த பாதையை மக்களுடைய பாவணைக்கு விடுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X