2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

Brexit-க்குப் பின்னர் Frexit?

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 27 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் நடைமுறை, Brexit என அழைக்கப்பட்டது. Britain exit என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமான வடிவமே, Brexit என அழைக்கப்பட்டது. அந்த வெளியேற்றத்தில் ஐக்கிய இராச்சியம் வெற்றியடைந்துள்ள நிலையில், ஏனைய சில -exitகளும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெளியேற்றச் சொற்றொடர், உண்மையில் Grexit என்பதிலிருந்தே ஆரம்பித்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கத்தை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதை Grexit என பொருளாதார நிபுணர்கள் சிலர் அழைத்தனர். ஆனால், அந்த வெளியேற்றம் இடம்பெற்றிருக்கவில்லை.

தற்போது வெளியாகியுள்ள ஏனைய -exit கோரிக்கைகள்:

Frexit: பிரான்ஸின் வலதுசாரித் தலைவரானமரீன் லே பென், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் முடிவு வெளிவந்த உடனேயே, தனது நிலைப்பாட்டை மீள வலியுறுத்திய அவர், பிரான்ஸிலும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சர்வஜன வாக்கெடுப்புகள் இடம்பெற வேண்டுமெனக் கோரினார்.

Nexit: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்தின் வெளியேற்றம். அந்நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சியின் தலைவர் கீர்ட் வில்டர்ஸ், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தேர்தலில் தனது கட்சியின் பிரசாரத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Oexit: இந்தப் பெயர், ஒஸ்திரியாவின் ஒஸ்திரிய மொழிப் பெயரான ஒஸ்தெரெய்ச் (ழுநளவநசசநiஉh) என்பதிலிருந்து வருகிறது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கு மிக அண்மைவரை வந்து தோற்றுப் போன வலதுசாரித் தலைவரான நோர்பேர்ட் ஹோபெரே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Swexit: சுவீடனின் வலதுசாரிக் கட்சியான சுவீடன் ஜனநாயகக் கட்சியினர், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சுவீடனில் 31 சதவீதமானோர், இக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

ஏனையவை:

Fixit: பின்லாந்தின் வெளியேற்றம்.

Dexit: டென்மார்க்கின் (டானிஷ்) வெளியேற்றம்.

Gerxit: ஜேர்மனியின் வெளியேற்றம்.

Itlalexit: இத்தாலியின் வெளியேற்றம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X