2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 28

Menaka Mookandi   / 2016 ஜூன் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1883: ஐரோப்பாவின் முதலாவது மத்திய மின்வலு நிலையம் இத்தாலியின் மிலான் நகரில் திறக்கப்பட்டது.

1894: தொழிலாளர் தினத்தை உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அமெரிக்கா அறிவித்தது.

1950: தென்கொரியாவின் தலைநகர் சியோலை வடகொரியா கைப்பற்றியது.

1967: கிழக்கு ஜெருஸலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1981: ஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இஸ்லாமிய குடியரசுக் கட்சி அங்கத்தவர்கள் 73 பேர் பலியாகினர்.

1997: அமெரிக்க குத்துச்சண்டை வீரர்களான மைக் டைஸனுக்கும் இவாண்டர் ஹொலிபீல்டுக்கும் இடையிலான அதிபார குத்துச்சண்டைப் போட்டியின் 3 ஆவது சுற்றில் ஹொலிபீல்டின் காதை டைஸன் கடித்து துண்டாக்கியதால் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம்செய்யப்பட்டார்.

2001: முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்காக நாடுகடத்தப்பட்டார்.

2004: ஈராக்கின் இறையாண்மை அமெரிக்காவினால் மீண்டும் ஈராக்கியர்களிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .