2024 மே 11, சனிக்கிழமை

3,932 அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ.1,355 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள், வீடுகளைத்; திருத்துதல், மலசலகூட வசதிகளை ஏற்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3,932 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 1,355 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (27) மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1,000 புதிய வீடமைப்புத் திட்டங்கள் 800 மில்லியன் ரூபாய் செலவிலும் 726 வீடுகளைத் திருத்துதல் 145.33 மில்லியன் ரூபாய் செலவிலும் 1,000 மலசலகூடங்களை அமைத்தல் 55 மில்லியன் ரூபாய் செலவிலும் 34 உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 154.67 மில்லியன் ரூபாய் செலவிலும் 1,164 வாழ்வாதார உதவிச் செயற்றிட்டங்களுக்காக 100 மில்லியன் ரூபாய் செலவிலும் 08 குடிநீர் விநியோகத் திட்டங்களுக்காக 100 மில்லியன் ரூபாய் செலவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இத்திட்டங்களில் வசதி வழங்குநர்களாக புதிய வீடமைப்புகளுக்கு உள்ளூராட்சி சபைகளும்  மலசலகூடங்களை அமைப்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளும் குடிநீர் விநியோகங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் வீடுகளைத் திருத்துவதற்கு பிரதேச செயலாளர்களும் செயற்படுகின்றனர்.

அனைத்துத் திட்டங்களின் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்டச் செயலாளரால் பணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .