2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்த ரயில் வண்டியில் உள்ளிருந்தவாறே அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திக் கொள்ளையடித்த செய்தியொன்றினை நான் எப்போதோ படித்த ஞாபகம்.

இந்தச் செய்தியானது, மனிதரின் கோழைத்தனத்தைக் காட்டும் வெட்கம் கெட்ட செயலல்லவா?

பக்கத்து வீட்டில் உள்ள கால் காசுக்குப் பெறுமதியில்லா அற்ப விடயத்துக்காக கத்தியைத் தூக்குபவர்கள், உயிர்போகும் தருணத்தில் போராடாமல், முடங்கி ஒளிப்பது போல் உள்ளது இச்சம்பவம்.

வெறும் கத்தி, வாள் கொண்டு தாக்க வந்த சிறு கூட்டத்தைத் தகர்க்க முடியாத ஆயிரக்கணக்கான பயணிகள். படுகாயப்பட்டு கொள்ளையரிடம் பவ்வியமாகப் பொருட்களைக் கொடுத்த இவர்கள், ஒன்றிணைந்து அவர்களை ஏன் தாக்கவில்லை?

துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல.

வாழ்வியல் தரிசனம் 29/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .