2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வலஹாவுக்கு வசதியில்லை

Kogilavani   / 2016 ஜூன் 29 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

லிந்துலை, வலஹா தோட்டத்தில் 33 வீடுகளைக் கொண்ட லயன் தொகுதியில் வாழும் 150இற்கும் மேற்பட்ட மக்கள், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்புப் பகுதியில் உள்ள சில வீடுகளில், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அனைவரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் அத்தோடு, மலசலகூட வசதிகள் இன்றியும், வடிகான்கள் செப்பனியிடப்படாமல் காணப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை உடைந்து, குன்றும் குழியுமாக காணப்படுவதால், இம்மக்கள் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு செல்லவேண்டுமாயின், பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், ஒரு பகுதிக்கு மாத்திரமே கிடைப்பதாகவும் தாங்கள் வாழும் பிரதேசத்துக்கு அபிவிருத்தித் திட்டங்களின் வாசனை கூட இதுவரை  வரவில்லை என பிரதேச மக்கள் அங்கலாய்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .