2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இப்தார் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கணமூலை பெரிய பள்ளியின் கீழ் இயங்கி வரும் பொதுச்சபையின் சமூக சேவைகள் பிரிவு ஏற்பாடு செய்த நோன்பு கற்றுத் தரும் பாடங்கள் தொடர்பில் சகோதர இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதலும் இப்தார் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளிவாயலில் இடம்பெற்றது.

கணமூலை பெரிய பள்ளியின் தலைவர் எம்.எஸ்.எம்.சஹீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மதுரங்குளி சர்னங்கராமய விகாரஸ்தான விகாராதிபதி  வண. முதலியக்குளிய ரத்ன ஜோதி மஹா தேரர், கடையாமோட்டை  சதா சர்ன தேவஸ்தான பாதிரியார் வண. பீட்டர் புடீதேஜூ, அஷ்ஷெய்க் ஆசாத் சிறாஸ் (நளீமி) மற்றும் சிலாபத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.விக்ரமசூரிய, கற்பிட்டி மற்றும் முந்தல் பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ஜீ.எம்.சோமரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருகை தந்த மும்மதத் தலைவர்கள் நல்லிணக்கம், ஒற்றுமை என்பன தொடர்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மூவின மக்களிடையே ஒற்றுமைய ஏற்படுத்துவதுடன், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான ஒன்றுகூடல்கள் வெற்றியளிப்பதாக அமையும் என மும்மதத் தலைவர்களும் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நிகழ்வுக்கு வருகை தந்த பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் பிரதிகளும் சிங்கள மொழி மூலமான இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .