Kogilavani / 2016 ஜூன் 30 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா
நம்பத்தகுந்த நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுகளை நோக்கிய பயன்தரக்கூடிய படிகளைத் தொடர்ந்தும் எடுத்து வைக்க, இலங்கைக்கு ஊக்கமளிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம்
பொறுப்புக் கூறலில் சர்வதேசப் பங்கெடுப்பு அவசியம். Pவுயு, இராணுவத்தை நீக்கி, வடக்கு - கிழக்கில் நீக்குக, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

ஐக்கிய இராச்சியம்
இராணுவம் வைத்திருக்கும் காணிகளைத் திரும்ப வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன தொடர்பில் இன்னும் செய்ய வேண்டியுள்ளது.

கனடா
நீதி விடயங்களில் மேலும் முன்னேற்றம் தேவை. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்கெடுப்புக்கான அர்ப்பணிப்பை நிறைவேற்றுக.

அவுஸ்திரேலியா
ஐ.நாவுடன் இலங்கையின் நேர்முகமான தொடர்பாடல்களை உணர்கிறது. அர்ப்பணிப்புகளைத் முன்னெடுக்க ஊக்குவிக்கிறது.

சுவிற்ஸர்லாந்து
வருந்தத்தக்க விதமாக, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நம்பிக்கையைக் கட்டியெழுப்புக. வடக்கு - கிழக்கில் காணிகளைத் திரும்ப வழங்க வேண்டும்.

நோர்வே
பொறுப்புக் கூறலில் சர்வதேசப் பங்கெடுப்புத் தேவை. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பிராந்தியங்களின் அபிவிருத்திக்கு உதவுவதில் அர்ப்பணிப்போடு உள்ளது.

பாகிஸ்தான்
இலங்கையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கிறது. மிகப்பெரிய படிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கிறது.

டென்மார்க்
வடக்கு - கிழக்கில் மனித உரிமைகளை நிலைமையை முன்னேற்ற, உறுதியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்குமாறு கோருகிறது.

ஜேர்மனி
பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறும் இலங்கையைக் கோருகிறது.

தென்கொரியா
ஐ.நா பொறிமுறைகளோடு ஒத்துழைக்குமாறு கோருகிறது. சமாதானமாக எதிர்காலம் நோக்கிப் பணியாற்றுமாறு கோருகிறது.

ஜப்பான்
தொடர்ந்து முன்னேற்றங்களை அடையுமென எதிர்பார்ப்பதோடு, கலந்தாலோசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நியூசிலாந்து
நல்லிணக்கம், அதிகாரப் பரவலாக்கத்தில் - குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ச் சமூகங்களுக்காக - விரைவாக ஈடுபடுமாறு ஊக்கப்படுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .