2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய ஆளுநர் எந்த நேரத்திலும் நியமிக்கப்படலாம்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஜயசேகர

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்குத் தகுதியான ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆறு வருட காலப்பகுதிக்குள் எந்த நேரத்திலும் நியமிப்பார் என்று பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள்,  மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கு நாணயச் சட்டத்தில் எந்தவொரு விதிமுறையும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், நிதித்துறையில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளவர். ஆனால், அது யாராக இருக்கும் என்று துப்புக் கொடுக்க தற்போது இயலாது' என்று அவர் குறிப்பிட்டார்.

'மத்திய வங்கிக்கான ஆளுநரை நியமிப்பது, ஜனாதிபதிக்கான தனிச்சிறப்பாகும். எனவே, அதற்கான தகுதியான ஒருவரை அவர் நியமிப்பார். புதிதாக ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை, இணைந்த எதிரணியால் முன்னெடுக்கப்படும் பேரணியை நிறுத்திவிடும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .