2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

றோம் வென்றால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 01 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் இத்தாலியத் தலைநகர் றோம் வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என்று இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த, பிரான்ஸின் தலைநகர் பரிஸ், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ், ஹங்கேரியின் தலைநகர் புடாபாஸ்ட் ஆகியன றோம் போட்டியிடுகின்ற நிலையில், புதிய விடுமுறைகளின்படி, போட்டியை நடாத்த வெல்லும் நகரம், அவர்கள் உள்ளடக்கலாம் என்று கருதுகின்ற ஐந்து விளையாட்டுக்களை உள்ளடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, ஒலிம்பிக்கை றோம் நடாத்தினால், கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் சிமோனே கம்பினோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒலிம்பிக் றோமில் நடைபெறுமானால், 2010ஆம் ஆண்டு நான்காவது பிரிவு உலக கிரிக்கெட் லீக்கை நடாத்திய போலோக்னாவிலேயே கிரிக்கெட் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இவ்வாறு நடைபெறுமானால் எந்த நாடுகள் பங்கேற்பது என்பது விவாதக்குரிய பொருளாகவே இருக்கும். அதிகபட்சமாக 16 அணிகளை பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கலாம் என்றபோதும், ஒலிம்பிக் விதிமுறைகளின்படி பூகோளமயப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வகையில் 12 அணிகள் பங்கேற்பதே சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.

12 அணிகள் உள்ளடக்கப்பட்டால், ஐரோப்பாவிலிருந்து மூன்று அணிகளும் ஆசியாவிலிருந்து மூன்று அணிகளும் ஆபிரிக்காவிலிருந்து இரண்டு அணிகளும் அமெரிக்கா மற்றும் கரீபியனிலிருந்து இரண்டு அல்லது மூன்று அணிகளும் தென் பசுபிக் பகுதியிலிருந்து இரண்டு அல்லது மூன்று அணிகளும் பங்கேற்கையில், ஒலிம்பிக்கில் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக இருக்கின்ற இங்கிலாந்து போன்ற பெரிய கிரிக்கெட் அணிகள், தவறவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரிஸூம் ஒலிம்பிக்கை நடாத்துவதற்காக போட்டியிடுகையில், கிரிக்கெட்டை உள்ளடக்குவதற்காக பிரான்ஸ் கிரிக்கெட்டும் முயற்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X