Shanmugan Murugavel / 2016 ஜூலை 02 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார்.
கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார்.
முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காயத்திலிருந்து மீள்வதற்கு சில நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதிகாண் போட்டிகளை தவறவிட்டமையால், 100 மீற்றர், 200 மீற்றர், 4*100 மீற்றரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் பெறும் கனவு நிறைவுக்கு வராது. ஏனெனில், தகுதிகாண் போட்டிகளில், காயம் காரணமாக வாய்ப்பு தவறினால், மருத்துவ விதிவிலக்குகளை ஜமைக்கா தடகள ஆளும் உடல் வழங்குகின்றது.
எவ்வாறெனினும் இலண்டனில், இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பமாகவுள்ள டயமண்ட் லீக் போட்டிகளில் பங்குபற்ற திட்டமிட்டுள்ள போல்ட், தனது உடற்றகுதியை நிரூபிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .