2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘2 மாதங்களுக்குள் குணமடைவேன்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 05 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமைர் வொலிட்

மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் சீராக, துல்லியமாக பந்து வீசும் திறமை கொண்ட 24 வயதான இலங்கை அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர, தமிழ்மிரரின் சகோதர ஊடகமான ‘விஸ்டன் இலங்கை”க்கு, தனது கிரிக்கெட் வாழ்வு தொடர்பாக வழங்கிய நேர்காணலின் தமிழ்வடிவம்.

கே : நீங்கள் கிரிக்கெட்டில் எவ்வாறு  இணைந்தீர்கள்?

ப : சிறுபராயம் தொட்டு எனக்கு கிரிக்கெட் விளையாடுவது என்றால் விருப்பம். நான் 6ஆம் தரத்தில் இருந்து பாடசாலைக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.நான் பாடசாலையை விட்டு வெளியேறிய பின் கிரிக்கெட் கழகங்களுக்காக விளையாடினேன். அதில் இருந்து இலங்கை "ஏ" அணிக்கு தகுதி பெற்றேன். அங்கு இலங்கை "ஏ" அணியில் சிறப்பாக விளையாடி பங்களிப்பு செய்தமையால் இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டேன்.

கே : நீங்கள் விரும்பி ரசிக்கும் சர்வேதேச வேகப்பந்து வீச்சாளர்கள் ?

ப :  பிரட்லீ மற்றும் டேல் ஸ்டெயின் பந்து வீசும் முறை எனக்கு விருப்பம்.

கே : உங்களது உபாதை தற்போது எவ்வாறான நிலையில் உள்ளது?

ப : இது ஒரு கீழ் முதுகு எலும்பு முறிவாகும். இந்த உபாதை பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்ளுக்கு ஏற்படும் உபாதை தான். இந்த உபாதை குணமடைய. சுமார் 3-4 மாதங்கள் வரை செல்லும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  ஒரு மாதம் ஏற்கனவெ கழிந்து விட்டது. அதனால் அடுத்து வரும் 2 மாதங்களுக்குள் உபாதையில் இருந்து மீள்வேன் என்று நான் நினைக்கிறேன். தற்போது நான் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

கே : இதுவரையுள்ள உங்கள் கிரிக்கட் பயணத்தில் மறக்கமுடியாத நிகழ்வு?

ப : எனது முதலாவது டெஸ்ட்  போட்டியில் ரொஸ் டெய்லரின் விக்கட்டை கைப்பற்றியது எனக்கு மறக்கமுடியாத சிறந்த தருணமாக உள்ளது.

கே: உங்களது சிறந்த பந்துவீச்சு?

ப : நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியின் போது முதல் இனிங்ஸில் 5 விக்கட்டுகளையும் இரண்டாவது  இனிங்ஸில் 4 விக்கட்டுகளையும் கைப்பற்றினேன். ஆனால் அந்த போட்டியில் தோல்வி அடைந்தோம். எனினும் அந்த போட்டியில் எனது தனிப்பட்ட பங்களிப்பு தொடர்பாக சந்தோஷம் அடைகிறேன்.

கே : மணிக்கு 140km  வேகத்தில் வீசுவது பற்று கருத்து?
ப  : சந்தோஷமாக உள்ளது. நான் பாடசாலை செல்லும் போது இவ்வளவு வேகமாக பந்து வீசியதில்லை 21 வயதாகும் போது தான் வேகமாக பந்துவீச ஆரம்பித்தேன். தற்போது மணிக்கு 145km  வேகத்தில் பந்து வீசுகின்றேன். இது தொடர்பாக நான் சந்தோஷம் அடைகிறேன்.

கே : உங்களது குடும்பத்தை பற்றி?

ப : எனது பெற்றோரோடு எனக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர். சகோதரர் மென்பொருள் பொறியலாளராக படித்து வருகிறார். சகோதரி இன்னும் பாடசாலை செல்கிறார்.

கே : கிரிக்கட் வீரர் என்ற அடிப்படையில் உங்களது எதிர்கால திட்டங்கள்?

ப : நிரந்தரமாக அணியில் இடம்பிடித்ததில்லை. அதனால் நிரந்தரமாக அணியில் இடம்பிடிக்க தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். எனது மனதில் சில மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உதாரணமாக டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கட்டுகளை கைப்பற்றுவது. இதை எதிர்காலத்தில் சாதிக்க நினைக்கிறேன்.

கே : அணியில் நெருங்கியவர்கள்?

ப : ஒருவரை மட்டும் குறித்துக் காட்ட முடியாது. பலர் உள்ளனர். பொதுவாக சுரங்க லக்மால், நுவான் பிரதீப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக இருப்போம். நான்  தசுன் ஷானகவோடு தான்  பாடசாலை சென்றது மற்றும் கிரிக்கட் விளையாடியது. அதனால் அவர் எனது தனிப்பட்ட சிறந்த நண்பர். அணியில் இணைந்த பின் நான் லக்மால்,  பிரதீப் , சந்திமால் ஆகியோரோடு நெருக்கமாக பழகினேன்.

(தமிழில்: இஷ்ரத் இம்தியாஸ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .