2024 மே 02, வியாழக்கிழமை

ஜான்சனின் அதிரடியால் சென்றலைட்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற போட்டிகளில், ஜொலிஸ்டார், ஸ்ரீகாமாட்சி, சென்றலைட்ஸ், மானிப்பாய் பரிஷ்,, ஜொனியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

அந்தவகையில், பற்றீசியன்ஸ், ஜொலிஸ்டார் அணிகளுக்கிடையிலான குழு ஒன்று போட்டியொன்றில் எட்டு விக்கெட்டுகளால் ஜொலிஸ்டார் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், ரீயூடரின் 22, சதானந்தனின் 16 ஓட்டங்களோடு 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்துவீச்சில் ஜொலிஸ்டார் சார்பாக வாமணன் 3, கல்கோகன், மது, கஜானா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்டார், 14.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீகன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் கல்கோகன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பற்றீசியன்ஸ் சார்பாக மொறிஸ், நோபேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக சஜீகன் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்துக்குமிடையிலான போட்டியில் ஐந்து ஓட்டங்களால் ஸ்ரீகாமாட்சி வெற்றி பெற்றிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ் 43, ரஜீவராஜ் 31, துவாரகன் 23, சுஜன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் சார்பாக இராகுலன், தனுசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் உத்தமன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 156 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக சசிகரன் 32, ஜெயரூபன் 22, ஆதித்தன் 20, இராகுலன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக சுஜன் 3, லிங்கநாதன், ராம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக சுஜன் தெரிவானார்.

இதேவேளை, சென்றலைட்ஸ், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 103 ஓட்டங்களால் கிறாஸ்கொப்பர்ஸை சென்றலைட்ஸ் தோற்கடித்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜேம்ஸ் ஜான்ஸன் 134, ஜூலியஸ் 44 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக, ஜனந்தன், சரண்ராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கபிலன், கோகுலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

240 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ், 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 103 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மதுஷன் 24, சாரங்கன் 22, டிலோஷன் 17, கபிலன், அஜித் ஆகியோர் தலா 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றலைட்ஸ் சார்பாக கிருபா நான்கு விக்கெட்டுகளையும் ஜெரிக், கோகுலன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜான்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜான்சன் தெரிவானார்.

தின்னைவேலி கிரிக்கெட் கழகம், மானிப்பாய் பரிஷ், ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆறு விக்கெட்டுகளினால் மானிப்பாய் பரிஸ் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தின்னைவேலி கிரிக்கெட் கழகம், 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சிவரதன் 42, றொஹான் 24, லவகாந் 23, கீர்த்திகன் 18, சசிந்தன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் சார்பாக வினோத், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளையும் டிலக்ஷன் 2, கிஷோக்குமார் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 152 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு ஆடிய மானிப்பாய் பரிஷ், 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, வினோத் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் கோபிரஷாந் 35 ஓட்டங்களையும் கிஷோக்குமார் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், தின்னைவேலி கிரிக்கெட் கழகம் சார்பாக சுரேந்திரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் நாயகனாக  வினோத் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, ஜொனியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆறு விக்கெட்டுகளினால் ஜொனியன்ஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  தீபன் 30, பபிதரன் 28, கஜீவன் 18, துவாரகன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக, அன்புஜன் 3, டக்சன் 2, லவேந்திரா, பிருந்தாபன், சஞ்சயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ், 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக கபில்ராஜ் ஆட்டமிழக்காமல் 67, அன்புஜன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக மோகன்ராஜ் 2, சுதர்சன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக கபில்ராஜ் தெரிவானார்.  

நாளை மறுதினம் புதன்கிழமை (06) காலை எட்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், மானிப்பாய் பரிஸை எதிர்த்து ஸ்‌கந்தாஸ்டார்ஸ் மோதவுள்ளதுடன், பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், சென்றலை எதிர்த்து கிறாஸ்கொப்பர்ஸ் மோதவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .