2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பதவி விலகினார் நைஜல் ஃபராஜ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தேசியவாதக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் பராஜ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு, முக்கியமான இருவரில் ஒருவரான பராஜ், அவ்வாறு விலகி இரு வாரங்களுக்குள், தனது கட்சித் தலைமையிலிருந்து விலகியுள்ளார்.

எப்போதுமே, முழுநேர அரசியல்வாதியாக இருப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த பராஜ், ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகியுள்ள நிலையில், அரசியல்வாதியாகத் தன்னால் அடையக்கூடியவற்றை, தான் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். "விலக வேண்டுமென்ற தரப்பு, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எனது அரசியல் குறிக்கோள், அடையப்பட்டுவிட்டது" என அவர் தெரிவித்தார்.

தற்போதைய பிரதமரான டேவிட் கமரோன், பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பராஜ், ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமராக, விலக வேண்டும் என்ற தரப்பினை நீண்டகாலமாகப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரே தெரிவுசெய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .