2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக விவகாரம்: 'திருத்தங்களை முன்மொழிவோம்'

Gavitha   / 2016 ஜூலை 05 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பற்றி கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, குறித்த அலுவலகத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் சில திருத்தங்களை முன்மொழிவதற்கு, நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் த.தே.கூ ஆல் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கேற்ப, அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை வரைவு செய்துள்ளது. இது தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது சட்டமாக்கப்படுமானால், போரின் போது காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகம் அமைக்கப்படும். இதற்கு அரசாங்கம் சில திருத்தங்களை கேட்டுள்ளதாக த.தே.கூ தெரிவிக்கின்றது.

இதற்கு முன்னர் சட்டத்தில் இருந்ததையும் விட சிறிது கூடுதலான திருத்தங்களை முன்மொழிவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த திருத்தங்களுடன் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .