George / 2016 ஜூலை 05 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குதிரமலையிலிருந்து வடமேற்கு பகுதியில் வைத்து இவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை புத்தளம் உதவி கடற்றொழில் அலுவலக பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நாட்டு படகில் வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எட்வின் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுவிஸ்டன், எட்மா, வினோத், விஜய், ரோனால்ட், ஆல்வின் ஆகிய 6 மீனவர்களே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .