2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போர்த்துக்கல் vs. வேல்ஸ்: ரொனால்ட்டோ vs. பேல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 05 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் போர்த்துக்கல்லும் வேல்ஸும் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் பலப்பரீட்சை நடாத்துகின்றன.

இதில், 2004ஆம் ஆண்டு யூரோ இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல்லுக்கு, இவ்வரையிறுதிப்போட்டி, மூன்றாவது யூரோ அரையிறுதிப் போட்டி என்பதுடன், மறுபக்கம், வேல்ஸூக்கு இவ்வரையிறுதிப் போட்டியே அவ்வணி பெரிய தொடரொன்றில் அரையிறுதிப் போட்டிக்குச் சென்ற முதலாவது சந்தர்ப்பமாக அமைகின்றது.

போர்த்துக்கல் vs. வேல்ஸ் என்ற அரையிறுதிப் போட்டிக்கு மேலதிகமாக, உலகின் பணக்கார கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரித் பேல் ஆகியோருக்கிடையிலான மோதலாகவே இப்போட்டி பார்க்கப்படுகிறது. இரண்டு வீரர்களிடையேயும் அவ்வளவு நல்ல உறவு இல்லை என்று கூறப்படுகின்றபோதும் இரண்டு வீரர்களும் தமக்கிடையே எந்தப் பிரச்சினையும் என்று தெரிவித்து வருகின்றனர்.

வேல்ஸின் ஆரம்பப் போட்டிகளில், ‘பிறீ கிக்’ மூலம் மிரட்டிய பேல், காலிறுதிப் போட்டிகளில் கோலினைப் பெற்றிருக்காத போதும் அரையிறுதிப் போட்டியில் வேல்ஸின் முக்கிய வீரராக பேலே விளங்குகிறார். அதுவும், வேல்ஸின் மற்றைய முன்கள வீரரான ஆரோன் ராம்ஸி, வேல்ஸின் இறுதி இரண்டு போட்டிகளிலும் மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால், இப்போட்டியில் விளையாட முடியாத நிலையில் முன்களத்தில் பேலின் பிரசன்னம் வேல்ஸுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. காலிறுதிப் போட்டியில் வேல்ஸ் சார்பாக அபார கோலினைப் பெற்ற றொப்சன் காணு, பேலுக்கு உதவியாக இருப்பார் என்று நம்பலாம்.

மறுபக்கம், தீர்க்கமான குழுநிலைப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்ற ரொனால்டோ, இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் வெற்றிக் கோலைப் பெற உதவியுடதுடன், காலிறுதிப் போட்டியில் கோல் பெறும் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தாலும், பெனால்டியில் முதலாமவராகச் சென்று கோலினைப் பெற்று அணிக்கு நம்பிக்கையை வழங்கியிருந்தார். இந்நிலையில், ரொனால்டோவுடன் நானி, இளம் வீரர் ரெனாட்டோ சந்தேஸ் ஆகியோரின் கூட்டணி போர்த்துக்கல்லுக்கு வெற்றியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .