Shanmugan Murugavel / 2016 ஜூலை 06 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .