Kanagaraj / 2016 ஜூலை 07 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துவருகின்ற ராஜ் ராஜரட்ணத்தின் நண்பனான மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம்' என்று, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
'ராஜ் ராஜரட்ணத்தின்; நிறுவனத்தில் பணியாற்றினார் என்றொரு விடயத்துக்காக மட்டுமே, மத்திய வங்கியின் ஆளுநரை விமர்சிக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
பொரளையில் நேற்றுப் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'இலஞ்சம் மற்றும் ஊழல்களில் இருந்து மத்திய வங்கியை மீட்டெடுக்கக் கூடிய ஒரு திட்டத்தை புதிய ஆளுநர் கொண்டுவருவார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த நிறுவனத்தில் பணியாற்றியமையை அவர், பகிரங்கமாகவே ஒப்புக்கொள்கின்றார். இவ்வாறான நிலையில், நாடாளுமன்றில் செய்த குற்றங்களை மறைத்துக்கொண்டு செயற்படுகின்றவரை விட, மத்திய வங்கியின் புதிய ஆளுநர் சிறந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கருத்துத்தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டீ செய்சா, 'முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரின் பதவி விலகல் மாத்திரம் அவர் செய்த தவறுகளுக்குத் தண்டனையாகாது, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கைச் சட்டத்தின் படி உரிய தண்டனை வழங்கப்படுதல் வேண்டும். அவரைச் சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயலவேண்டும்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .