2024 மே 02, வியாழக்கிழமை

ஜே.பி.எல்: கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 07 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் புதன்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மானிப்பாய் பரிஷ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பரிஷ் முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீத் 82, ஜெயதீபன் 23, நிதர்ஷன் 18, கோபிரஷாந்த் 12  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார்ஸ் சார்பாக, துவிசன், சிந்துஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணுபிரகாஷ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 160 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார்ஸ்,  18.1 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கதியோன் 53, துவிசன் 22, நிரோஜன் 21, சயந்தன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பரிஷ் சார்பாக, சுபாஸ் மூன்று, யாழினியன், கிசோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சஜீத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக கதியோன் தெரிவானார்.

சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ்20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அஜித் ஆட்டமிழக்காமல் 107, கபிலன் 48, மதுஷன் 35, டிலோஜன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக சலிஸ்ரன் இரண்டு, மில்லர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்கு 247 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றல், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 56 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சலிஸ்ரன் 79, காளஸ் 68, பாலேந்திரா 15 ஓட்டங்களைப் பெற்றனர்.  பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக ஜனந்தன், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ராஜகாந்தன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அஜித் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .