George / 2016 ஜூலை 08 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 127 பேருக்கும் சுகாதார ஊழியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சருக்கு, நியமனம் பெற்றவர்கள் நேற்று வியாழக்கிழமை (07) பாராட்டு; விழா நடத்தினர்.
யாழுக்கு விஜயம் செய்த சுகாதார, சுதேச மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது ஊழியர்களால் வழங்கப்பட்ட கௌரவத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த 127 ஊழியர்களும் நீண்ட காலமாக சென்யோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பின் கீழ் சுகாதார தொண்டர்களாக 175 ரூபாய் நாள் சம்பளத்துக்கு வேலை செய்தனர். பின்பு தம்மை நிரந்தரமாக சுகாதார தொண்டர்களாக நியமிக்குமாறு பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த 127 பேரும் சுகாதார ஊழியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். இந்த நிரந்தர நியமனத்தை வழங்கிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் சிறுவர் பெண்கள் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .