2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 15 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்சுங் சாதனங்கள் தொடர்பான தகவல்களை கசிய விடும் இணையப் பிரபலமான Evan Blass வெளியிட்ட படங்களின்படி, வெளியிடப்படவுள்ள சாதனமானது முனைகளைக் கொண்ட வளைந்த திரையயைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும் வெளியிடப்படவுள்ள சாதனமானது, தன்னுள்ளே எத்த்கையவற்றைக் கொண்டிக்கும் என்பது விவாதக்குரிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக USB Type-C portஐ கொண்டிருக்குமா மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட Snapdragon 821 chipsetஐ கொண்டிருக்குமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .