முடிந்தால் அனுப்புங்கள்
20-07-2016 10:59 AM
Comments - 0       Views - 75

அரசாங்கத்துக்குச் சொந்தமாக, நன்றாக இலாபமீட்டக்கூடிய நிறுவமொன்றின் தலைவரை வீட்டுக்குச் செல்லுமாறு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது, குறித்த விடயத்துக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரால் நியமிக்கப்பட்டவரே, மேற்படி நிறுவனத்தின் தலைவராவார்.

இந்த தலைவரும் சாதாரணமானவர் இல்லை. அவர், அரசியல் கட்சியொன்றின் தலைவராவார். அவருடைய கட்சியில் தான், தற்போதுள்ள நாட்டின் தலைவர், அன்னம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அதனால், கேகாலை அமைச்சரின் காஸ் பார்ப்பதற்கு, அவர் தயாராக இல்லையாம். அவர் எந்தளவுக்கு காஸ் காட்டினாலும், தன்னுடைய அதிகாரத்தில், அந்தப் பதவியிலேயே தான் நிலைத்திருக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு மேலும் தன்னை தொந்தரவுக்கு உட்படுத்தினால், தன்னிடம் சட்டரீதியான துருப்புச் சீட்டொன்று உள்ளதென அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளாராம்.

"முடிந்தால் அனுப்புங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty