வரிசையில் நின்ற முன்னாள் தலைவர்
20-07-2016 11:20 AM
Comments - 0       Views - 338

இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம்.

இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது.

'ஹா அது என்ன பெரிய விசயமா?' என்று சொல்லிக்கொண்ட முன்னாள் தலைவர், தான் சென்ற வேலைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக, நிப்போன் விமான நிலையத்துக்குச் சென்றாராம். அங்கு அவர், தன்னுடன் கூடவே வந்த எம்.பி.க்களையும் அழைத்துக்கொண்டு, சாதாரண மக்கள் செல்லும் வரிசையில் சென்றாராம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஜப்பான் அதிகாரிகள், 'நீங்கள் ஏன் இங்கு நின்றுகொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டு, அவருக்கு உயர் மரியாதை வழங்கி, அழைத்துக்கொண்டுச் சென்றார்களாம்.

"வரிசையில் நின்ற முன்னாள் தலைவர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty