Princiya Dixci / 2016 ஜூலை 20 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை, தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்தார்.
அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.
இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவன், பிணை விண்ணப்பம் செய்தார்.
மாணவர் ஒன்றியத் தலைவரால் தாக்கப்பட்ட மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், இவருக்குப் பிணை வழங்கக்கூடாது என பொலிஸார் மன்றில் கூறினர்.
எனினும், மாணவர் ஒன்றியத் தலைவர் எந்தவிதமான தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லையென சட்டத்தரணி கூறியதையடுத்து, நீதவான் பிணை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .