2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழில்நுட்ப Startupகளை ஊக்குவிக்கவுள்ள Disrupt Asia

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூகோளப் பொருளாதாரமானது, தனது நிலைப்பரப்பில் பாரிய நிறுவனங்கள் ஏற்படும் மாற்றத்தினை விட அதிகப்படியான மாற்றத்தை ஏற்படும் சக்தி ஒன்றினை தற்போது அவதானிக்கிறது. இந்த மாற்றமானது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்ற தொழில்நுட்ப Startupகளினாலேயே ஏற்படுகிறது.

மேற்குறித்த மாற்றத்துக்கு ஒத்ததாக, கடந்த மூன்று வருடங்களாக இலங்கையிலும் புதிய Startup நிறுவனங்களை உருவாக்கும் பொருட்டு, பல்வேறு நிலைகளில் உள்ள Startupகள் மற்றும் பல்வேறு வகையான நிறுவனங்கள், ஒரு அமைப்பாக ஈடாடுதல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கையின் மேற்குறித்தவாறான அமைப்பில், வேறுபட்ட தனியார் மற்றும் அரச துறை பங்குதாரர்களிடையே உறுதியான கூட்டிணக்கம், முன்னொருபோதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த தேவையையே Disrupt Asia பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றது. அதாவது, உயர்மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களோடு Startupகளை இணைக்கும் இயக்குதளமொன்றை உருவாக்கி, Startupகளுக்கு கட்டாயம் தேவையான புலப்படும் தன்மையை வழங்கி, அவர்களிடையேயான தொடர்பாடல்களை உறுதிப்படுத்த Disrupt Asia முயல்கிறது. தவிர, அதிக தாக்குறவான பார்வையாளர்களிடையே, Startupகள், தமது தயாரிப்புக்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பையும் Disrupt Asia வழங்குகின்றது.

எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை எட்டு மணி முதல் ஹில்டன் கொழும்பில் Disrupt Asia இடம்பெறவுள்ளது. இதில், மாநாடு, முதலீட்டாளர் பயிலரங்கு, தொழில்நுட்ப காட்சிப்படுத்துதல், Startup போட்டி,  தொடர்பாடல் அமர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில், குறிப்பிட்ட சில சிலிக்கன் பள்ளத்தாக்கு நிபுணர்களும், இலங்கையின் முக்கியமான சிந்தனைத் தலைவர்களும் நாள்முழுவதும் உரையாற்றவுள்ளனர். காலையில் சிறப்புரையாக, Startupகளின் எழுச்சி எனும் தலைப்பில் Startup Compass பிரதம நடவடிக்கை அதிகாரி JF Gauthir உரையாற்றவுள்ளதோடு, மாலை சிறப்புரையை, அலைபேசி விளம்பர வலையமைப்பான Kiipஇன் இணை நிறுவுநரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான Brian Wong ஆற்றவுள்ளார்.

மேற்குறித்த சிறப்புரைகளில் பார்வையாளர்கள் பங்கேற்ற எதிர்பார்க்கப்படுவதுடன், ஆரம்ப நிலையிலுள்ள தொழில் முனைவோரை ஊக்குவித்து, ஆரம்ப நிலையிலுள்ள Startupகளை உருவாக்கவும், இறுதி நிலையிலுள்ள Startupகளின் வளர்ச்சியை] வேகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி முகுந்தன் கனகே, வணிகப் பயிற்சியாளர் மற்றும் தொழில் முனைவோரான ஃபயாஸ் ஹுடாஹ், Cinergix பிரதம நிறைவேற்றதிகாரி சந்திக ஜயசுந்தர, Calcey இணை நிறுவுநரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான மங்கள கருணாரட்ன, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் திட்டங்களுக்கான பணிப்பாளர் அருனேஷ் பீற்றர், Creately இணை நிறுவுநர் மற்றும் பிரதம தொழில்நுட்ப அதிகாரி ஹிராஷ் தௌஃபீக், PayMedia  நிறுவுநர் கனிஷ்க வீரமுந்த, SurgeViral நிறுவுநர் பானுக ஹரிஷ்சந்ர, WSO2 எழுத்தாளர் யுதாஞ்சய விஜேரட்னே உட்பட மேலும் பலர் உரையாற்றவுள்ளனர்.

இது தவிர, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரம், சிலிக்கன் பள்ளத்தாக்கு முதலீட்டாளர்களை AngelLabsசுடன் அழைத்து வந்து முழுநாள் பயிலரங்கை நடாத்தவுள்ளது.

இந்நிலையில், ஆரம்ப நிலை முதலீடுகள் மற்றும் நிதியொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட பங்காளர்களாக எவ்வாறு மாறுவது என்பது தொடர்பில், SnapDeal மற்றும் Pinterest ஆகிவற்றில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள புதிய தொழில் நிறுவனத்தின் Sheel Tyle உரையாற்றவுள்ளதோடு, எவ்வாறு முதலீட்டு வாய்ப்பை உருவாக்குவது, பிரிவொன்றில் உத்தியை கட்டமைப்பது மற்றும் வெற்றியாளர்களை தெரிவு செய்வது உட்பட சிறிய, ஆரம்ப நிலையிலுள்ள, வளர்ச்சியடைந்து வரும் நிறுவனங்களுக்கு நிதியளித்தல் தொடர்பான முழுமையான விளக்கத்தை, First Data நிறுவனத்தால் கையப்படுத்தப்பட்டுள்ள Gyftஇல் முதலீடுகளை மேற்கொண்ட Karlin சொத்து முகாமைத்துவத்தின் Arteen Arabshahi அளிக்கவுள்ளார்.

இது தவிர, உடைமையை எவ்வாறு கட்டமைப்பது, எவ்வாறு உடன்படிக்கை பேச்சுவார்த்தை நடத்துவது, எவ்வாறு Startup முதலீட்டாளருக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளடங்கலாக Startupகளுக்கு முதலீடு செய்வது தொடர்பில் Angel Labsஇன் Tugce Ergul உரையாற்றவுள்ளார்.

மேற்கூறிய மூன்று பேச்சாளர்களின் உரைகளின் மூலம், நிஜ உலக அனுபவங்கள் மற்றும் முடிவெடுத்தல் தொடர்பான தகவல்களை பார்வையாளர்கள் பெற்றுக்கொள்வதுடன், எவ்வாறு முதலீட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும் என தெளிவான தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, Disrupt Asia நிகழ்வின்போது, 75 வரையான முதலீட்டாளர்களுக்கு, 50 வரையான தொழில்நுட்ப Startupகள், காட்சிப்படுத்தலை நிகழ்த்தி, தற்போது வரையில், மிகப்பெரிய தொழில்நுட்ப Startup காட்சிப்படுத்தலாக இந்நிகழ்வு அமையவுள்ளது. தவிர, Startup போட்டியின்போது அளிக்கைகளை மேற்கொள்ளமுடியும். Readmeயால் Voltage230 போட்டி நடாத்தப்படவுள்ளதுடன், Hemasஇனால் Slingshot போட்டி நடாத்தப்படவுள்ளது.

Edulink சர்வதேச பல்கலைக்கழகம், Seven Media, Readme, Shoutoutஇன் இணைப்பில், Disrupt Asia நிகழ்வுக்கு, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகமானது ஆதாரவளித்து ஒழுங்கமைத்திருந்தது. இதன் பிரதான நோக்கமாக, இலங்கையிலுள்ள தொழில்முனைவோரை இணைப்பதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .