2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவிலிருந்து யானைகளை கொண்டுவருவது அவசியம்

Kogilavani   / 2016 ஜூலை 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் காலங்களில், கண்டி எசல பெரஹெராவில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிலிருந்து யானைகளை கொண்டுவந்து பயிற்சிகள் வழங்க வேண்டிய தேவை, தற்போது ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப்  கூறினார்.

கண்டி, பெரஹெராவை வெற்றிகரமாக முனெடுப்பதில் நன்கு பழக்கப்பட்ட முதிர்;ச்சியுள்ள கொம்பன் யானையும் மற்றும் பெரஹெரா ஊர்வலத்தில் பங்குபற்றிய  அனுபவம் கொண்ட சாதாரண யானைகளினதும் தட்டுப்பாடு காரணமாக, எதிர்காலத்தில் எசல பெரஹெரா காலத்தில் சவால்களை எதிர்கொள்ள வேணடிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'எசல பெரஹெராவின் போது, ஸ்ரீ தலதா மாளிகையின் புனிதத் தந்தத்தை எடுத்துச் செல்லும் 'மில்லங்கொடை சின்னராஜா' என்றழைக்கப்படும் கொம்பன் யானைக்கு மதம் பிடித்துள்ளதால் இம்முறை பெரஹெராவில் அவ் யானையை பணிக்கமர்த்த முடியாது. எனவே, புதிய யானையை கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பெரஹெராவில் பங்கேற்கும் யானைகள், மேளவாத்தியங்கள், சனக் கூட்டங்கள்,  தீப் பந்தங்கள் மற்றும் ஊர்வலத்துக்கு பழக்கப்பட்டிருப்பது அவசியமாகும். அதனடிப்படையில், பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள யானைகள் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் எனக் கூறமுடியாது' எனவும் அவர் கூறினார்.

'ஸ்ரீ தலதாமாளிகையின் புனித  தந்தத்தையுடைய பேழையை (தலதா கரண்டுவ) சுமந்துச் செல்லும் யானை,  நன்கு முதிர்ச்சியுற்ற 9 அடி  உயரமான 35 - 40 வயது வரையானதாக இருக்க வேண்டும். அதேநேரம், நீண்ட பொருத்தமான கொம்புகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

அவ்வாறான யானைகள் ஏற்கனவே மூன்று இருந்துள்ளன. இவற்றில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான 'ராஜா'  என்ற கொம்பன் யானை மிக முக்கியமானது. அந்த யானை உயிரிழந்த பிறகு மில்லங்கொடை ராஜா என்ற யானை பெரஹெராக்களில் பங்கேற்று வந்தது.  தற்போது அந்த யானையும் சுகவீனமுற்றுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருக்க, இந்தியாவிலிருந்து யானைகளைக் கொண்டுவந்து பக்குவப்படுத்திக் கொள்வது முக்கியம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .