2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 

நல்லாட்சி அரசாங்கமானது அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
இருந்தபோதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி, மஹிந்தவின் குழு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய வௌ;வேறு கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிநிரல்களைக் கொண்ட 03 தரப்பினர்களுக்கும் மத்தியிலிருந்து சிரமத்துடன் பணியாற்றவேண்டிய நிலைமையுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு ஏறாவூர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் செவ்வாய்கிழமை  (26) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் தற்போது ஓர் உறைக்குள் 02 வாள்களை  வைத்துக்கொள்ளும் அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர் பிரதியமைச்சராக இருந்துகொண்டு ஒருவரையொருவர் கண்காணிக்கின்றனர்' என்றார்.
 
'புதிய அரசியல் மாற்றமானது சிறுபான்மைச் சமூகத்தினர் தேடி எடுத்துக்கொண்ட அரசியல் மாற்றமாகும். இது அரசியல்வாதிகள் தேடி எடுத்துக்கொடுத்ததல்ல.
 
இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்ற நோக்கத்துடன் மஹிந்த தரப்பினர் இன்னும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .