2024 மே 14, செவ்வாய்க்கிழமை

கால் தடுக்கி கீழே விழுந்தார் பாப்பரசர்

George   / 2016 ஜூலை 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலந்து நாட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றி பாப்பரசர், காலிடறி கீழே விழுந்துள்ளார்.

பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் திரும்புகையில் அவரது கால் தடுக்கியுள்ளது.

அருகில் இருந்த மதகுருமார்களின் துணையுடன் உடனே எழும்பி  நின்றார் அதிஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை.

பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் எனினும் பலி பீடத்துக்கு செல்ல முடியாததால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.

ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு தற்போது 79 வயதாகின்றது. ஐரோப்பாவில் அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாப்பரசரின் இந்த போலந்து விஜயத்தில் அதிகளவு பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .