2026 மார்ச் 12, வியாழக்கிழமை

மஹிந்த பேசமாட்டார்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஜன சட்டன' பாதயாத்திரையின் இறுதி தினக் கூட்டத்தின் போது, தான் விசேட அறிவிப்பு எதனையும் விடுக்கப்போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், இந்தப் பாதயாத்திரையின் இறுதிக் கூட்டத்தை நடத்த கொழும்பு ஹைட் மைதானத்தைக் கோரியிருந்த போதிலும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும், தான் அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, கால்களில் கொப்புளங்கள் வரும் வரையில் பாதயாத்திரை சென்றாலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து, அவருடைய சொந்தக் கருத்தல்ல என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .