Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி சாதனை படைத்தது.
அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது மன்னார் பொது விளையாட்டரங்கில் , கடந்த வாரயிறுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 36 அணிகள் பங்குபற்றின. இதில், விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழகமும், ஜோசப்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டியில் மோதின.
போட்டி தொடங்கி 4ஆவது நிமிடத்தில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக வீரர் நிதர்சன் முதலாவது கோலையும் இரண்டாம் பாதியின் 6ஆவது நிமிடத்தில் வின்சன் பற்றிக் இரண்டாவது கோலையும் போட்டு 2 – 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று விடத்தல்தீவு யுனைற்றட் சம்பியனாகியது.
ஆட்ட வேளையில் ஜோசப்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழகம் தனக்கு கிடைத்த ஒரு பெனால்டியை தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வீரராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக வீரர் நிதர்சனும் சிறந்த கோல்காப்பாளராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக கோல்காப்பாளர் ஜோண் வெஸ்லியும் தொடரின் சிறந்த வீரராக யோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழக வீரர் டெஸில் தேவ் அவர்களும் தெரிவாகி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 20,000 ரூபாய் பணப்பரிசும் கால்பந்தும் 2ஆம் இடத்தைப்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் அவர்களால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .