2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

நான் இனியும் அணித்தலைவராக இல்லை: சமி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தடவைகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உலக இருபதுக்கு-20 பட்டங்களை பெற்றுக் கொடுத்த டரன் சமி, தனது பேஸ்புக் கணக்கில் பிரசுரித்த காணொளியொன்றில், தான் இனியும் மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு-20 அணித்தலைவராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு-20 அணியின் தலைமைத்துவத்தை மீளாய்வு செய்வதாவும் மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சமிக்கு இடமில்லை எனவும் அலைபேசி அழைப்பொன்றின் மூலம் தேர்வாளர்கள் குழுத் தலைவர் தனக்கு அறிவித்ததாக நேற்று வெள்ளிக்கிழமை (05) பதிவிடப்பட்ட காணொளியொன்றில் சமி தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு முதல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, 47, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய சமி, 27 தடவைகள் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X