Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிறைந்த ஆரம் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதில், பிரேஸில் நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆண்களுக்கான 10 மீற்றர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில், வியட்னாமுக்குத் தங்கம் கிடைத்தது.
ஒலிம்பிக் வரலாற்றில் வியட்னாமுக்குக் கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பதோடு, இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஆசிய நாடொன்று பெற்றுக் கொண்ட முதலாவது தங்கமாகவும் அது அமைந்தது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வியட்னாமின் போட்டி நாடான சீனாவைத் தோற்கடித்து இந்தத் தங்கம் பெறப்பட்டமை என்பது, அந்நாட்டுக்கு மேலும் மகிழ்ச்சியை வழங்கியது.
41 வயதான ஹூவாங் ஸூவான் வின்ங் என்ற இராணுவ கேணலே, இந்தத் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்தவராவார். போட்டிகளை நடத்தும் பிரேஸிலின் பெலிப்பே அல்மெய்டா, இரண்டாமிடத்தையும் சீனாவின் பங் வெய், மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
வரலாறு படைத்த ஹூவாங் ஸூவானுக்கு, 100,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதாக, வியட்னாமின் அரச ஊடகம் தெரிவித்தது. வருடாந்த சராசரி வருமானமாக 2,100 அமெரிக்க டொலர்களைக் கொண்ட வியட்னாமில், 100,000 அமெரிக்க டொலர்கள் என்பவை, மிகப்பெரிய பணமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .